- This event has passed.
ஒருநாள் பன்னாட்டு கருத்தரங்கம் “அற இலக்கியங்களில் வாழ்வியல் சிந்தனைகள்” – 04.09.2025
September 4, 2025 @ 9:30 am - 3:00 pm
ஒருநாள் பன்னாட்டு கருத்தரங்கம் “அற இலக்கியங்களில் வாழ்வியல் சிந்தனைகள்”
மதுரை காமராசர் பல்கலைக்கழகம், சுல்தான் இதுரீசு கல்வியியல் பல்கலைக்கழகம், மலேசியா மற்றும் முதுகலை மற்றும் தமிழாய்வு மையம், ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி, தூத்துக்குடி ஆகியவை இணைந்து 04.09.2025 அன்று “அற இலக்கியங்களில் வாழ்வியல் சிந்தனைகள்” எனும் தலைப்பில் ஒரு நாள் பன்னாட்டு கருத்தரங்கத்தை நடத்தியது.
இந்நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் உள்ள பொன்விழா அரங்கத்தில் காலை 10.00 மணிக்கு தொடங்கியது. முதலில் முதல்வர் க. சுப்புலட்சுமி, ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி, வரவேற்புரையாற்றினார். பின்னர் திருமதி. சோ. சுப்புலட்சுமி, செயல்வர், ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி, தலைமை ஏற்று உரையாற்றினார்.
முனைவர் தி. இராஜேந்திரன், நிறுவனர், ஸ்ரீ சனீஸ்வரா அறக்கட்டளை, குச்சசுனூர், வாழ்த்துரை வழங்கினார். முனைவர் கார்த்திகேசு பொன்னையா, இணைப் பேராசிரியர் மற்றும் தமிழ்த்துறைத் தலைவர், சுல்தான் இதுரீசு கல்வியியல் பல்கலைக்கழகம், மலேசியா, நோக்கவுரையாற்றினார்.
பின்னர் சிறப்புரைகள் இடம்பெற்றன.
-
முனைவர் போ. சத்தியமூர்த்தி, தலைவர், தமிழியல் துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம்.
-
முனைவர் இளங்குமரன் சிவநாதன், மூத்த விரிவுரையாளர், தமிழ்த்துறை, சுல்தான் இதுரீசு கல்வியியல் பல்கலைக்கழகம், மலேசியா.
-
முனைவர் பிராங்குளின் தம்பி ஜோஸ், மூத்த விரிவுரையாளர், தமிழ்த்துறை, சுல்தான் இதுரீசு கல்வியியல் பல்கலைக்கழகம், மலேசியா.
முடிவில் முனைவர் ச. மல்லிகா, தமிழ்த்துறைத் தலைவர், ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி, நன்றியுரை வழங்கினார்.
இந்நிகழ்வில் பல ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை வழங்கினர். அற இலக்கியங்கள் தரும் வாழ்வியல் சிந்தனைகள் நவீன வாழ்க்கையில் எவ்வாறு வழிகாட்டுகின்றன என்பதைக் கருத்தரங்கம் சிறப்பாக வெளிப்படுத்தியது.
இவ்வாறான பன்னாட்டு கருத்தரங்கம், தமிழ் இலக்கியத்தின் ஆழத்தையும், அதன் காலத்தால் அழியாத வாழ்வியல் தத்துவங்களையும் உலக மேடையில் எடுத்துரைக்கும் அரிய வாய்ப்பாக அமைந்தது.
