Back
Loading Events

« All Events

  • This event has passed.

49th Graduation Day – 21.02.2026

February 21 @ 9:30 am - 12:00 pm

🎓 49-வது பட்டமளிப்பு விழா – 2026 🎓

ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி, தூத்துக்குடி சார்பில் 2022–2025 கல்வியாண்டு மாணவிகளுக்கான 49-வது பட்டமளிப்பு விழா 21.02.2026 அன்று காலை 10.00 மணிக்கு வ.உ.சி. கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் N. சந்திரசேகர் அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு பட்டங்களை வழங்கி பட்டமளிப்பு தின உரையை நிகழ்த்தினார். கல்லூரி முதல்வர் முனைவர் K. சுப்புலட்சுமி அவர்கள் மற்றும் அனைத்து துறைத்தலைவர்கள் கல்வி உடையணிந்து மேடையில் இடம்பெற்றனர்.

மாணவிகளை வாழ்த்திய முதன்மை விருந்தினர், பட்டம் பெறுதல் கல்வி வாழ்க்கையின் முக்கியமான சாதனை என்றும், உயர்கல்வி, ஆராய்ச்சி மற்றும் சமூக பொறுப்புணர்வுடன் கூடிய தொழில் பாதையைத் தேர்வு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து துறைத்தலைவர்கள் தங்களது துறைகளைச் சேர்ந்த மாணவிகளின் பெயர்களை அறிவித்து பட்டங்களை வழங்கினர். இதில் 515 இளநிலை (UG) மற்றும் 93 முதுநிலை (PG) மாணவிகள் பட்டங்களைப் பெற்றனர்.
கல்வியில் சிறந்து விளங்கிய தங்கப்பதக்கம் பெற்ற மாணவிகள்
👉 செல்வி P. கார்த்திகா (B.A. தமிழ்)
👉 செல்வி M. மொஹிதீன் ஜாஸ்மின் (B.A. ஆங்கிலம்)
👉 செல்வி S. பொன் இசக்கி அர்ச்சனா (B.Com.)
ஆகியோர் சிறப்பாக கௌரவிக்கப்பட்டனர்.

முதன்மை விருந்தினர் தலைமையில் பட்டதாரிகள் அனைவரும் தங்களது அறிவையும் பட்டங்களையும் சமூக மேம்பாட்டிற்காக பயன்படுத்துவோம் என்ற உறுதிமொழியை ஏற்றனர். பின்னர் கல்லூரி முதல்வர் விழா நிறைவடைந்ததாக அறிவித்தார். தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவடைந்தது.

விழாவின் ஏற்பாடுகளை வேதியியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் D. சண்முகப் பிரியா மற்றும் ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் K.S. அனுஷ்யா ஆகியோர் சிறப்பாக மேற்கொண்டனர்.

Details

Date:
February 21
Time:
9:30 am - 12:00 pm
Event Categories:
,