Back
Loading Events

« All Events

  • This event has passed.

Free Eye Screening Camp – organised by NLC Tamil Nadu Power Limited (NTPL), Thoothukudi in association with A.P.C. Mahalaxmi College for Women, Thoothukudi and Aravind Eye Hospital, Thoothukudi – 16.11.2025

November 16, 2025 @ 9:30 am - 12:30 pm

என். எல். சி.தமிழ்நாடு பவர் லிமிடெட் தூத்துக்குடி பொறுப்புணர்வு திட்டத்தின் உதவியுடன் தூத்துக்குடி ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரியும் அரவிந்த் கண் மருத்துவமனையும் இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் 16.11.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மாப்பிள்ளையூரணியில் உள்ள ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கலை அரங்கத்தில் காலை 9 மணி அளவில் என்.எல்.சி லிமிடெட் CEO திரு. K.அனந்தராமானுஜம் அவர்கள் தலைமையிலும் ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரியின் முதல்வர் முனைவர்.க.சுப்புலட்சுமி அம்மா அவர்களின் முன்னிலையிலும் மேலும் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் செ.பெத்துபாலமுருகன் அவர்களின் ஆதரவுடன் துவங்கப்பட்டது.

ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட (அணி எண்கள் 47 & 57) ஒருங்கிணைப்பாளர்களான வேதியியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ஸ்டெல்லா பாக்கியம் மற்றும் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் புஷ்பகவல்லி ஆகியோரால் ஒருங்கிணைக்கப்பட்டு திறம்பட வழிநடத்தப்பட்டது. கணிதத்துறை உதவி பேராசிரியர்களான முனைவர் மகேஸ்வரி, முனைவர் பால தீபரசி, தாவரவியல் துறை உதவிப் பேராசியர் சொர்ணலட்சுமி ஆகிய மூவரும் இம்முகாமை வழிநடத்தி ஊக்கமளித்தனர்.இந் நிகழ்ச்சி சிறப்புடன் நடப்பதற்கு உறுதுணையாக ஏ.பி.சி கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் சுமார் 35 பேர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சேவை செய்தனர்.இந்த இலவச கண் பரிசோதனை மருத்துவ முகாமில் 240 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.கண் பரிசோதனை செய்து கொண்ட பொதுமக்களுக்கு மருந்துகள் மற்றும் கண் கண்ணாடிகளும் வழங்கப்பட்டன. கண் அறுவை சிகிச்சை செய்பவர்களுக்கு அரவிந்த் மருத்துவ மனையில் வைத்து இலவசமாக சிகிச்சை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கண் பரிசோதனை முகாமானது பொது மக்கள் மனநிறைவு பெறும் வகையில் சிறப்புடன் நடைபெற்றது.

Details

Date:
November 16, 2025
Time:
9:30 am - 12:30 pm
Event Categories:
,