- This event has passed.
தமிழ் இலக்கிய மன்றத்தின் தொடக்க விழா – 01.08.2025
August 1, 2025 @ 11:00 am - 12:30 pm
ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியின் முதுகலை மற்றும் தமிழாய்வு மையம் 2025–2026 ஆம் கல்வியாண்டிற்கான தமிழ் இலக்கிய மன்றத்தின் தொடக்க விழாவை 01.08.2025 அன்று காலை 11.00 மணிக்கு கல்லூரிக் கலையரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் வரவேற்புரையை முனைவர் ச. மல்லிகா, இணைப்பேராசிரியர் மற்றும் தமிழ்த்துறைத் தலைவர் ஆற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் க. சுப்புலட்சுமி அவர்கள் விழாவிற்கு வாழ்த்துரையளித்தார். 
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கவிஞர் மு. செல்லா, மாவட்டத் தலைவர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், மதுரை, “தமிழ் இலக்கியங்கள் காட்டும் அழகியல்” என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினார். நன்றியுரையை முனைவர் சு. விஜயா கலைவாணி, இணைப்பேராசிரியர் ஆற்றினார். இந்த நிகழ்வு மாணவிகளுக்குத் தமிழ் இலக்கியத்தின் அழகு, ஆழம் மற்றும் அருமையைப் புரிந்து கொள்ளும் அரிய வாய்ப்பாக அமைந்தது.
