Back

முத்தமிழ் விழா- 10.02.2026

தூத்துக்குடி ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரியின் தன்னிகரற்ற துறைகளுள் ஒன்றாக இயங்குவது தமிழ்த்துறை. தமிழ்த்துறையின் சார்பில் ஆண்டுதோறும் இயல்,இசை, நாடகத் தமிழைச் சிறப்பிக்கும் வகையில் முத்தமிழ் விழாக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில், தமிழ்த்துறையால் 10.02.2026 இன்று முத்தமிழ் விழாக் கொண்டாடப்பட்டது. விழாவின் தொடக்கமாக இறை வாழ்த்தும்,தமிழ்த்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டன. தமிழ்த்துறைத்தலைவர்,முனைவர்.மல்லிகா வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர்.மோனிகா ராம்ராஜ் வாழ்த்துரை நல்கினார். முத்தமிழ் விழாவின் முத்தாய்ப்பாக, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்கள் முனைவர்.விஜயலட்சுமி …