Back

INSTRUCTIONS TO THE APPLICANTS / விண்ணப்பதாரர்களுக்கான வழிமுறைகள்

—-

                                                                                         ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரி, தூத்துக்குடி - 2
                                                                                      ( தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு – 78 வது இடம் )
                                                                                              2023 – 2024 கல்வி ஆண்டிற்கான பட்டமளிப்பு விழா

அன்புடையீர்!
நமது கல்லூரியின் 2023-2024 கல்வி ஆண்டிற்கான (48 வது ) பட்டமளிப்பு விழா, 02.02.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 08.30 மணிக்கு வ.உ.சிதம்பரம் கல்லூரியில் வைத்து நடைபெற உள்ளது.
பட்டமளிப்பு விழா நிகழ்வில் பட்டம் பெறும் மாணவியர்கள் கருத்தில் கொள்ள வேண்டியவைகள் :
1. மாணவியர்கள் பட்டம் பெறுவதற்கு முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்வதற்கு கல்லூரி இணையதளத்தில் இந்த லிங்க் மூலம் ரூ.600/- செலுத்தி 17.01.2025 க்குள் முன்பதிவு செய்ய வேண்டும்.
2. மாணவியர்கள் 02.02.2025 ஞாயிற்றுக்கிழமை சரியாக காலை 07.30 மணிக்கு வ.உ.சிதம்பரம் கல்லூரிக்கு வர வேண்டும்.
3. பட்டம் பெறும் போது அணியப்படும் உடைக்கு, உடை வழங்கும் பொறுப்பாளரிடம் முன்வைப்பு தொகையாக ரூ.300/- செலுத்த வேண்டும். இந்த ரூ.300/-ஐ, நிகழ்ச்சி முடிந்தவுடன் மாணவியர்களே உடையை திரும்ப கொடுத்து அவரிடம் இருந்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளவும்.
4. மாணவியர்கள் புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்படமாட்டாது. புகைப்படம் மற்றும் வீடியோ (8 X 6 Photo and DVD) வேண்டும் மாணவியர்கள் கல்லூரி அனுமதி பெற்ற புகைப்படம் எடுப்பவரிடம் ரூபாய்.100/- மட்டும் செலுத்தி பெற்று கொள்ளவும்.
5. கைஅலைபேசி (Mobile) கண்டிப்பாக அரங்கத்தினுள் கொண்டு வருதல் கூடாது.
6. காலை 07.30 மணிக்கு நடக்கும் விழா ஒத்திகையில் பங்கு பெறும் மாணவியர் மட்டுமே இவ்விழாவில் பட்டம் பெற அனுமதிக்கப்படுவர். ஒத்திகையின் போது பங்கு பெறாத மாணவியர்கள் கண்டிப்பாக பட்டம் பெற அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
7. பட்டம் பெறும் மாணவியர் மட்டுமே கல்லூரி அரங்கத்தினுள் அனுமதிக்கப்படுவர்.
8. பட்டம் பெறும் மாணவியர்கள் தங்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இருக்கையில் தான் அமர்தல் வேண்டும்.
9. பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறும் மாணவியரின் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொள்ள அனுமதி இல்லை.
10. பட்டமளிப்பு விழா நடைபெறும் வ.உ.சிதம்பரம் கல்லூரியின் வளாகத்திற்குள் பட்டம் பெறும் மாணவியர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
11. கல்லூரி வளாகத்தில் கைஅலைபேசி அனுமதிக்கப்பட மாட்டாது.
12. பட்டமளிப்பு விழா முடிந்தவுடன் அனைத்து மாணவியரும் உடனடியாக கல்லூரி வளாகத்தில் இருந்து வெளியேற வேண்டும்.
Contact Numbers of regarding graduation:
Graduation Helpline:
0461 - 2345655, 9500492188, 9597386173