Back
Loading Events

« All Events

  • This event has passed.

தூத்துக்குடி மகளிர் கல்லூரியில் 50-வது ஆண்டு பொன்விழாவில் ஒன்று கூடிய பழைய மாணவிகள் – பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்ட பெண் அமைச்சர்

August 27, 2023 @ 10:00 am - 5:00 pm

* தூத்துக்குடி மகளிர் கல்லூரியில் 50-வது ஆண்டு பொன்விழாவில் ஒன்று கூடிய பழைய மாணவிகள் – பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்ட பெண் அமைச்சர் !!! *

 

தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் அமைந்துள்ள ஏபிசி மகாலட்சுமி மகளிர் கல்லூரி கடந்த 1973ம் ஆண்டு துவங்கப்பட்டது. கல்லூரியில் நடைபெற்ற பொன்விழா கொண்டாட்டத்தில் கல்லூரியின் முன்னாள் முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், கல்லூரி ஊழியர்கள் ஆகியோர் சந்திப்பு நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் ஏபிசிவீ சொக்கலிங்கம் தலைமை வகித்தார். கல்லூரி செயலாளர் சுப்புலட்சுமி வரவேற்புரையாற்றினார்.

இந்த கல்லூரியில் பயின்ற வடக்கு மாவாட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, கல்லூரியில் பயின்ற மறக்க முடியாத நினைவுகளை பகிர்ந்து கொண்டு பேசுகையில், ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லுரியின் 50-வது பொன்விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளை கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தார்கள். இதில் 1973-ல் படித்த மாணவிகள் முதல் கடந்த முறை பயின்ற மாணவிகள் வரை வந்துள்ளீர்கள்.  ஏபிசி வீரபாகு மிகச் சிரமங்களுக்கு இடையில் இந்த கல்லூரியை தொடங்கி தற்போது வளர்ச்சி பெற்ற கல்லூரியாக அரசு அதிகாரிகள், மற்றும் உயர் பதவிகள் ஆன்றோர்கள், சான்றோர்களை உருவாக்கியுள்ளது. தூத்துக்குடி மண்ணைச் சார்ந்த மகாகவி பாரதியாரின் கனவை நனவாக்கும் எண்ணமாக இந்த கல்லூரி தொடங்கப்பட்டது. தற்போது அந்த கனவு மெய்ப்பிக்கப்பட்டு இருக்கிறது.நான் 12ம் வகுப்பு வரை தமிழ்வழி கல்வி தான் படித்தேன். இங்கு வந்து சேர்ந்த பின்பு எப்படி படிக்க போகிறோம் என்று ஒருவாரமாக பல்வேறு சிந்தனைகள் இருந்தது உண்டு. பல ஆசிரியர்கள் எங்களை கண்டிப்புடன் வழி நடத்தினார்கள். ஆடை அலங்காரம் தேவைதான் ஆனால் அதற்கு அடிமையாகிவிடக் கூடாது. இந்த பெண்கள் கல்லூரியில் படிக்கும் காலத்தில் தொழில் செய்ய வேண்டும். அல்லது தொழிலதிபராக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த எனக்கு இன்று அரசியலில் பணியாற்றி வருகிறேன். இந்த மகளிர் கல்லூரியில் படித்ததால் தான் நான் இன்று சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சராக இருக்கிறேன். இன்றும் சிறந்த கல்லூரிகளின் வரிசையில் இக்கல்லூரியும் உள்ளது. இக்கல்லூரியின் கல்விப்பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன் என்றார்.

பின்னர் தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த முன்னாள் மாணவிகள் தங்களது குடும்பத்துடன் பங்கேற்று தங்கள் மலரும் நினைவுகளை வெளிப்படுத்தினர்.  தொடர்ந்து அவர்கள் தாங்கள் பயின்ற வகுப்பறை, வளாகம் ஆகிய இடங்களுக்குச் சென்று குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து முன்னாள் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் முன்னாள் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி கணிதத்துறைத் தலைவர் பழனி, உதவி பேராசிரியர் ராதா, வேதியல் துறைத் தலைவர் கோகிலா சுபத்ரா, தமிழ்த்துறை உதவி பேராசிரியர் நீதா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

 

Click here to know more

Details

Date:
August 27, 2023
Time:
10:00 am - 5:00 pm
Event Category: